கேக்ஸ்வீட்

ஃப்ரூட் சாலட் கேக்

Fruit salad cake

சமைக்க தேவையானவை


  • ஸ்பான்ஞ் கேக் ஸ்லைஸ் – 3,
  • மேங்கோ அல்லது விருப்பமான கஸ்டர்ட் பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்,
  • பால் – 1 கப்,
  • சர்க்கரை – 1/2 கப்,
  • பங்கனப்பள்ளி மாம்பழம் – 1,
  • சர்க்கரை தூள் – 2 டீஸ்பூன்,
  • கிரீம் – 1½ கப்,
  • அலங்கரிக்க
  • பொடியாக நறுக்கி கலந்த பழக்கலவை – 1 கப்
  • அல்லது சாக்லேட் சிப்ஸ் அல்லது நட்ஸ் டிரை ஃப்ரூட்ஸ்


செய்முறை


பாத்திரத்தில் கஸ்டர்ட் பவுடர், பால், சர்க்கரை சேர்த்து கலந்து, அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.  கெட்டியான கூழ் பதத்திற்கு வந்ததும் இறக்கி ஆற வைத்து, பழக்கலவையை கலந்து வைக்கவும்.  மாம்பழத்தை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கிரீமை பொடித்த சர்க்கரையுடன் பொங்க அடித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

ஒரு கண்ணாடி புட்டிங் பாத்திரத்தில் முதலில் கேக் துண்டுகளை அடுக்கி, அதற்கு மேல் கஸ்டர்ட் கலவையை லேயராக ஊற்றி சுற்றிலும் பரப்பவும். அதற்கு மேல் மாம்பழத் துண்டுகளை பரப்பி, மேலே கிரீம் கலவையை ஊற்றவும். கடைசியாக அலங்கரிக்க கொடுத்த பொருட்களை விருப்பத்திற்கு அலங்கரித்து, ஃப்ரிட்ஜில் 3 மணி நேரம் குளிர வைத்து செட் ஆனதும் எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button