அசைவம்மீன்

அயிரை மீன் குழம்பு

airai Fish

சமைக்க தேவையானவை


 • அயிரை மீன் – கால் கிலோ
 • தக்காளி – 2 கடுகு
 • தாளிக்க தேவையானவைகள்
 • பச்சை மிளகாய் -3
 • நல்லெ எண்ணெய்- 5 ஸ்பூன்
 • மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
 • மல்லி தூள்- ‍ 2 ஸ்பூன்
 • மிளகாய்த்தூள்‍ 1 ஸ்பூன்
 • பூண்டு- 10 பல்
 • புளி- சிறிய எலுமிச்சை அளவு
 • சின்ன வெங்காயம் 150 கிராம்
 • அரைத்த தேங்காய் – 5 ஸ்பூன்
 • கருவேப்பிலை, கொத்தமல்லி இலை – சிறிதளவு
 • உப்பு – தேவைக்கு

செய்முறை :


முதலில் அயிரை மீனை கல் உப்பு போட்டு நன்றாக மூன்று நான்கு முறை தண்ணீர் விட்டு கழுவ வேண்டும். அயிரை மீனில் மண் அதிகம் இருக்கும் அதனால் மண் போக நன்கு கழுவ வேண்டும்.


பின்பு ஒரு கடா யில் எண்ணெய் விட்டு, கடுகு, , கருவேப்பிலை, பூண்டு, வெங்காயம் தாளித்து, வதங்கியவுடன், தக்காளி,சேர்க்க வேண்டும்.


தக்காளி மசிந்தவுடன், மிளகாய்த்தூள், மசாலாத்தூள் சேர்க்க வேண்டும். புளித்தண்ணீர் விட வேண்டும்.


அதனுடன் அரைத்த தேங்காய் தேவையான அளவு உ்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து குழம்பு ஒரளவுக்கு கெட்டியானவுடன் மீனை போட வேண்டும்,


பின்பு 5 நிமிடம் கழித்து குழம்பை இறக்கி வைத்து அதில் சிறிதளவு கருவேப்பிலை,கொத்தமல்லி இலை போட்டு மூடி வைக்கவும்.பின்பு பரிமாறவும்.


அயிரை மீன் நன்மைகள்


அயிரை மீனில் உள்ள அதிகளவிலான அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், சாச்சுரேட்டட் கொழுப்புக்களைப் போன்று இரத்த நாளங்களில் படிந்து இரத்த ஓட்டத்தை தடை செய்யாமல், எளிதில் செரிமானமாகி இரத்த ஓட்டத்தில் இடையூறு செய்யாமல், இரத்த அழுத்த பிரச்சனை வராமல் தடுக்கும். ஒருவேளை உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருப்பின், இந்த மீனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் இரத்த அழுத்தத்தை சீராகப் பராமரிக்கலாம்.


சில ஊட்டச்சத்து நிபுணர்கள், இறைச்சிகள் ஹார்மோன்களின் அளவை அதிகரிப்பதாக கூறுகின்றனர். அதாவது இறைச்சிகளை உண்பதால், ஹார்மோன் சம்பந்தமான நோய்களான சர்க்கரை நோய் வரும் அபாயம் அதிகரிக்குமாம். ஆனால் அயிரை மீனை உண்பதால், சர்க்கரை நோய்க்கான அபாயம் குறைவதாக கூறுகின்றனர்.


புற்றுநோய் வருவதற்கான முக்கிய காரணியாக இருப்பது ப்ரீ ராடிக்கல்களாகும். இருப்பினும் சில வகையான புற்றுநோய் செல்கள் ஹார்மோன்களின் செயல்பாடுகளாலும் வளர்ச்சி பெறும். அப்படி ஹார்மோன் செயல்பாடுகளால் வரும் புற்றுநோய் தான் மார்பக புற்றுநோய். ஆனால் அயிரை மீனை உட்கொண்டால், மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கலாம்.


அயிரை மீனால் கிடைக்கும் நன்மைகளுள் ஒன்று, இதய ஆரோக்கியத்தைப் பராமரிப்பது. இந்த சிறிய மீனில் உள்ள கொழுப்பு அமிலங்கள், இரத்த ஓட்டத்தை சீராகப் பராமரித்து, இரத்தம் உறைவதைத் தடுத்து, இதயத்தின் செயல்பாட்டை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.


கண்களைத் தாக்கும் மாகுலர் சிதைவு நோய் பொதுவாக 50 வயதிற்கு மேற்பட்டோரைத் தாக்கி, பார்வை குறைபாட்டை ஏற்படுத்தும். ஆனால் அயிரை மீனை ஒருவர் உணவில் அடிக்கடி சேர்த்து வருவதன் மூலம், அதில் உள்ள போதுமான வைட்டமின்கள் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மாகுலர் சிதைவு நோயைத் தடுக்கும்.


நன்னீரில் வளரும் அயிரை மீனில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள், பார்வைக் கோளாறைத் தடுக்கும். மேலும் மாலைக் கண் நோய் மற்றும் சில நாள்பட்ட கண் நோய்களையும் தடுக்கும். அயிரை மீனியில் உள்ள புரோட்டீன், வைட்டமின் ஈ சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எனவே சரும பிரச்சனைகள் வராமல் சருமம் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்க வேண்டுமானால், அயிரை மீனை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள்.


நினைவாற்றல் சிறப்பாக இருக்க வேண்டுமானால், அயிரை மீனை சாப்பிடுங்கள். ஏனெனில் இதில் உள்ள ஒமேகா-3 மற்றும் பாஸ்பரஸ், மூளையின் வளர்ச்சிக்கு உதவும். எனவே உங்கள் குழந்தை புத்திசாலியாக இருக்க வேண்டுமானால், அவர்களுக்கு அயிரை மீனைக் கொடுங்கள்.


அயிரை மீனில் பாஸ்பரஸ் மட்டுமின்றி, எலும்புகளை வலிமையாக்கத் தேவையான கால்சியமும் உள்ளது. ஆகவே வளரும் குழந்தைகளுக்கு அயிரை மீனை அடிக்கடி கொடுங்கள். இதனால் அவர்களது எலும்பு வளர்ச்சி பெறுவதோடு, வலிமையும் ஆகும். அயிரை மீனில் உள்ள அமினோ அமிலங்கள், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, நோய்களின் தாக்கத்தில் இருந்து உடலைப் பாதுகாக்கும்.


கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், அயிரை மீனைக் கொடுங்கள். இதில் உள்ள காம்ப்ளக்ஸ் சத்துக்கள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி பாதுகாக்கும்.


உடலில் உள்ள சேதமடைந்த திசுக்களை சரிசெய்ய புரோட்டீன் சத்து அவசியம். இத்தகைய சத்து பால், முட்டை போன்ற உணவுகளில் இருந்தாலும், அயிரை மீனில் இச்சத்து ஏராளமான அளவில் உள்ளது. எனவே உடலில் இருக்கும் சேதமடைந்த திசுக்களை வேகமாக சரிசெய்ய அயிரை மீனை அடிக்கடி சாப்பிடுங்கள்.


அயிலை மீன் முக்கிய குறிப்புகள்


அயிரை மீன் எவ்வளவு தான் ஆரோக்கியமானதாக இருந்தாலும், வாரத்திற்கு 3 முறைக்கு மேல் உட்கொள்ளக் கூடாது என மருத்துவர்களும், ஊட்டச்சத்து நிபுணர்களும் கூறுகின்றனர். அயிரை மீனை எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். ஆனால் அயிரை மீன் கருவாட்டை சமைக்கும் முன், முதலில் அதை லேசாக வறுக்க வேண்டும்.


வறுத்த பின், அந்த கருவாட்டை சுடுநீரில் 30 நிமிடம் ஊற வைத்து, நீரை வடிகட்ட வேண்டும். பின் அந்த கருவாட்டை மீண்டும் சுத்தமான நீரில் கழுவவும். இறுதியாக அந்த கருவாட்டை விருப்பமான முறையில் சமைத்து சாப்பிடலாம். ஆனால் மீனை அளவுக்கு அதிகமாக சூடேற்றி வேக வைத்தால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வெளியேறிவிடும்.

அயிலை மீன் வரலாறு


அயிரை மீன் என்பது ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளில் பொதுவாகக் காணப்படும் நன்னீர் மீன் இனம் ஆகும். இவை குளம், வாய்க்கால் மற்றும் சேறுகள் நிறைந்த சிறு ஆறுகள் போன்றவற்றில் வாழ்கின்றன. இவை உருவத்தில் மிகச்சிறிய அளவில் இருக்கின்றன. இவை உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. உணவுக்குப் பயன்படுத்தும் போது பிற மீன்களைப் போல் இம்மீனின் எந்தப் பகுதியும் நீக்கப்படுவதில்லை.


இம்மீன்கள் சேற்றுப்பகுதியில் வசிப்பதால் இதன் உடலில் இருக்கும் மேல் தோல் சிறிது நிறமாகும்படி உப்பு கொண்டு ஏதாவது ஒரு பாத்திரத்தில் போட்டு நீர் ஊற்றி இரு சில முறை சுத்தம் செய்யப்படுகிறது. இம்மீன் மருத்துவ குணமுடையதாக இருப்பதால் இதனை வாங்கி உண்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. எனவே இதன் விலையும் பிற ஆற்று மீன்களை விட அதிகமாக உள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலுள்ள அசைவ உணவகங்களில் இம்மீன் குழம்பு கிடைக்கிறது. சங்க இலக்கியங்களிலும் அயிரை மீன் குறித்து கூறியுள்ள சான்றுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
3
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்
Source
image

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button