அசைவம்மீன்

அயிலை மீன் குழம்பு

aailai fish gravy

சமைக்க தேவையானவை


 • முழு அயிலை சுத்தம் செய்தது – 10
 • பெரிய வெங்காயம் – 3,
 • பச்சை மிளகாய் (கீறியது) – 4
 • சீரகம் – 2 டீஸ்பூன்
 • மீன் மசாலா தூள் – 3 டீஸ்பூன்
 • மஞ்சள்தூள் – 2 டீஸ்பூன்
 • மிளகாய் தூள் – 2டீஸ்பூன்
 • மல்லித் தூள் – 2டீஸ்பூன்
 • கறிவேப்பிலை – 2கொத்து
 • புளி – பெரிய எலுமிச்சை அளவு
 • தேங்காய்பால் – 1 டம்ளர்
 • கடுகு, – 2 டீஸ்பூன்
 • மல்லித்தளை – 2 டீஸ்பூன்
 • தக்காளி – 3 சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
 • வதக்கிய வெண்டைக்காய் – 10
 • நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
 • பூண்டு – 4
 • உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை :


முதலில் மீனை நன்கு சுத்தம் செய்துக் கொள்ளவும். பின்பு எல்லா பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.


அகன்ற பாத்திரம் சூடானவுடன் ஆயிலை ஊற்றி கடுகு, சீரகம், வெந்தயம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பில்லை நன்றாக வதக்கவும்.


அரைத்த பெரிய வெங்காயம்-தக்காளி விழுதையும் சேர்த்து வதக்கவும்.மீன் மசாலா தூள்,மஞ்சல் தூள், மிளகாய் தூள், மல்லிப்பொடி சேர்த்து வதக்கவும்.


புளி கரைசலை சேர்க்கவும். உப்பு தேவைக்கேற்ப சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். மீனை சேர்க்கவும். வெண்டைக்காயை வதக்கிக் கொள்ளவும். வதக்கிய வெண்டைக்காய் சேர்க்கவும்.


தேங்காய்ப்பால் சேர்த்து 5 நிமிடம் மூடி வைக்கவும். கொத்துமல்லி தூவி இறக்கவும். பின்பு பரிமாறவும்.


அயிலை மீன் பயன்கள்


அயிலை மற்றும் நெய் சாளை போன்றவை கொழுப்பு மீன்களில் முக்கியமானவைகளாகும். மீனில் உள்ள கொழுப்பு எளிதில் செரிமாணம் ஆகக்கூடியதே. இவற்றுள் நிறைவேறா கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருப்பதால் கொலஸ்ட்ரால் போன்று இவ்வமிலங்கள் இரத்தக்குழாய்களில் படிவதில்லை. எனவே மாரடைப்பு போன்ற நோய்வாய்ப்பட்டவர்கூட உண்பதற்கு ஏற்ற  மீன் அயிலை என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button