குழம்பு

அரைக்கீரை குழம்பு

AraiKeerai Kulambu

சமைக்க தேவையானவை


 • அரைக்கீரை — 1 கட்டு (சுத்தம் செய்தது)
 • சின்ன வெங்காயம் — 1/2 கப் (வட்டமாக நறுக்கியது)
 • துவரம் பருப்பு — 1/2 கப் (வேகவைத்தது)
 • பச்சை மிளகாய் — 2 என்னம் (நீளமாக நறுக்கியது)
 • சீரகம் — 1/2 டீஸ்பூன்
 • சாம்பார் பொடி — 2 ஸ்பூன்
 • புளி- நீரில் கரைத்தது
 • தாளிக்க
 • மிளகாய் வத்தல் — 3 என்னம்
 • கடுகு, உளுந்து — 1/2 டீஸ்பூன்
 • கறிவேப்பிலை — 1 இனுக்கு


செய்முறை


முதலில் கீரையை அலசி அதனுடன் சீரகம், வெங்காயம், பச்சைமிளகாயை சேர்த்து 1/2 கப் தண்ணீருடன் வேகவைக்கவேண்டும் பின்பு 5 நிமிடம் கழித்து சாம்பார் பொடி, புளித்தண்ணீரை சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.

பின்னர் இறக்கி தண்ணீரை கொஞ்சம் இறுத்து வைத்து கீரையை நன்றாக கடையவும் .பின்பு வேறு வாணலியில் எண்ணைய், கடுகு, உளுந்து தாளித்து மிளகாய் வத்தல், கறிவேப்பிலை போட்டு மசித்த கீரையை ஊற்றி ஒரு கொதி கொதித்ததும் வேகவைத்த பருப்பை போட்டு உப்பு சேர்த்து கொதிக்கவைத்து இறக்கவேண்டும். பருப்பு சேர்த்த அரைக்கீரை குழம்பு ரெடி.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button