
சமைக்க தேவையானவை
- சிக்கன் – அரை கிலோ
- தக்காளி – பொடியாக அரிந்தது – 4
- இஞ்சி பூண்டு விழுது – 3 ஸ்பூன்
- மல்லி தூள் – மூன்று ஸ்பூன்
- சீரக தூள் – இரண்டு ஸ்பூன்
- மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
- பெரிய வெங்காயம் – பொடியாக அரிந்தது – 3
- மிளகாய் தூள் – இரண்டு ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- வறுத்து அரைக்க: கிராம்பு – 4
- பட்டை, பிரிஞ்சி இலை, ஸ்டார் பிரிஞ்சி, ஏலக்காய் – 3 சிறிய பீஸ்
- தேங்காய் துருவல் – 4 ஸ்பூன்
- சோம்பு, மிளகு – அரை ஸ்பூன்
- (மேற்சொன்ன அனைத்தையும் எண்ணெய் விடாமல் வறுத்து தேங்காய் துருவலுடன்
- கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மையாக அரைத்து வைத்து கொள்ளவும்)
- கடுகு, உளுந்து, கருவேப்பிலை – கொஞ்சம்
- சமையல் எண்ணெய் – 7 ஸ்பூன்
செய்முறை
முதலில்கடாயில் எண்ணெய் விட்டு, கடு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து பின் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி, இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். தக்காளி நீர் விட்டு நன்கு கூழ் ஆகும் வரை வதக்கவும் .சிக்கனை சுத்தம் செய்து, கழுவி இத்துடன் சேர்த்து வதக்கவும்.
பின் அணைத்து பொடி வகைகள் + உப்பு சேர்த்து 15 -20 நிமிடம் மிதமான சூட்டில் மூடி போட்டு சமைக்கவும். தண்ணீர் விட தேவையில்லை. சிக்கன் நீர் விட்டு நன்கு வெந்திருக்கும். இப்போது அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து கிளறி 5 நிமிடம் சமைக்கவும்.பரிமாறவும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1