இனிப்பு பொங்கல்பொங்கல்

அவல் சர்க்கரைப் பொங்கல்

Aval Sweet Pongal

சமைக்க தேவையானவை


  • அவல் – ஒரு கப்
  • வெல்லம் – ஒரு கப்
  • குங்குமப்பூ – சிறிது
  • பால் – 1/2 கப்
  • நெய் – 1/4 கப்
  • ஏலக்காய் – 1
  • முந்திரி – 10
  • பச்சைப் பயறு – 1/4 கப்
  • திராட்சை – 10


செய்முறை


முதலில் பச்சைப் பருப்பை வெறும் வாணலில் சிவக்க வறுத்துக்கொள்ளவும்.அதே வாணலில் அவலைப் போட்டு சூடேறும்வரை வறுத்துக்கொள்ளவும்.

பச்சைப் பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு அது வேகும் அளவிற்கு தண்ணீர் விட்டு மலர வேக வைக்கவும்.பருப்பு வெந்ததும் அதில் ஒரு பங்கு அவலுக்கு இரண்டு பங்கு பாலும், தண்ணீருமாகக் கலந்து ஊற்றி கொதிக்க வைக்கவும்.

பின்பு கொதி வந்ததும் அவலைக்கொட்டிக் கட்டித்தட்டாமல் நன்றாகக் கிளறி மிகவும் குறைவானத் தீயில் மூடி வேகவைக்கவும்.அவல் சீக்கிரமே வெந்துவிடும்.சிறிது சூடான பாலில் குங்குமப்பூவைப் போட்டுக் கலக்கி பொங்களில் சேர்த்துவிடவும்.

இதற்கிடையில் ஒரு அடி கனமான பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தைப் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அடுப்பிலேற்றி இளம் பாகு பதம் வந்ததும் பொங்கலில் கொட்டிக் கிளறவும்.

ஏலக்காயைத் தட்டிப் போடவும்.பின்னர் ஒரு வாணலில் நெய் விட்டு முந்திரி,திராட்சை இரண்டையும் பொன்னிறமாக வறுத்து இவற்றை நெய்யுடன் சேர்த்து பொங்கலில் கொட்டிக்கிளறி இறக்கவும்.பரிமாறவும்

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்
Source
image

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button