
சமைக்க தேவையானவை
- மட்டன் – 1/2கிலோ
- பாஸ்மதி அரிசி- 3 கப்
- சிறிது தண்ணீர்
- தேங்காய் எண்ணெய் – 50கிராம்
- தயிர் – 1/4 கப்
- இஞ்சிபூண்டு பேஸ்ட் 1/4 கப்
- பல்லாரி – 2
- தக்காளி -1
- புதினா – 1/4 சிறு கட்டு
- பச்சமிளகாய் -12-15
- கொத்தமல்லி -1/2 சிறு கட்டு
- பட்டை, கிராம்பு, ஏலக்காய் தலா 2
- கசகசா -10கிராம்
- மிளகாய்த்தூள் – 1 மே.கரண்டி
- அரைக்க: தேங்காய் துருவல் – 3 மே.கரண்டி
- நெய் -50 கிராம்
- பாதம் 10கிராம்
- எலுமிச்சைப்பழம் -1
- முந்திரி 10கிராம்
- உப்பு – தேவைக்கு
செய்முறை
முதலில் வெங்காயம், தக்காளியினை நீட்டமாக மெலிதாக நறுக்கி வைக்கவும். கறியுடன் 2ஸ்பூன் தயிர், 1ஸ்பூன் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து விரவி ½ மிணிநேரம் ஊற வைக்கவும். தாளிக்க மீதி தயிர், மீதி இஞ்சிபூண்டு பேஸ்ட், ரம்ப இலை, பட்டை, கிராம்பு,ஏலம் சேர்த்து தனியாக வைக்கவும். பாஸ்மதி அரிசியினை 20 நிமிடம் ஊற வைக்கவும்.
கணமான பாத்திரத்தில் எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்த பின்புதாளிக்க வேண்டிய பொருட்களை போட்டு வதக்கவும். வதங்கிய பின்புவெங்காயம், தக்காளி, பச்சமிளகாய் சேர்த்து பச்ச வாசனை போகும்வரை வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்க வேண்டும். இதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை சேர்க்கவும். நன்றாக வதங்கிய பிறகு விரவி வைத்த மட்டனை போடவும்.
இதனுடன் மிளகாய்த்தூள், அரைத்த நட்ஸ் விழுது, உப்பு சேர்த்து நன்றாக மூடிப்போட்டு 1/2 மணிநேரம் வேகவிடவும் கறி நன்றாக வேகம் வரை வேகவிடவும். பிறகு அதில் 1கப் அரிசிக்கு 1 1/2 கப் என்ற அளவில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். நன்றாக கொதிவந்த பின்பு ஊற வைத்த அரிசியினை சேர்க்கவும். நன்றாக கிண்டிவிடவும் மேலே கடைசியாக எலுமிச்சை பழத்தினை சுற்றிவரை பிழிந்துவிடவும்.
பிரியாணி சட்டியினை மூடி போட்டு மேலே ஒரு அடிகணமான பாத்திரம் வைத்து ஆவி போகாமல் 10-15 நிமிடம் ஹை தணலிலும் அடுத்த 15 நிமிடங்கள் குறைந்த தணலிலும் வைத்து அடுப்பினை அணைக்கவும்.
பிறகு 20-30 நிமிடம் கழித்து சூட சூட பரிமாறவும். டிஸ்கி குறைந்த அடுப்பில் சட்டியினை வைக்கும் பொழுது தோசை தவாவினை கீழே வைத்து மேலே சட்டியினை வைத்தால் அதிகம் கீழே அடிபிடிக்காது. பிரியாணி எடுக்கும் பொழுது மரக்கரண்டியினை பயன்படுத்தவும். மரக்கரண்டியால் பிரியாணி எடுக்கும்பொழுது பிரியாணி உடையாமல் வரும்.