
சமைக்க தேவையானவை
- ஆட்டுக்கால் – 8
- முந்திரி பருப்பு – 8
- மைதா – 2 மேசைக்கரண்டி
- எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
- மல்லித்தழை , கறிவேப்பிலை – சிறிது
- பெரிய வெங்காயம் – 2
- தக்காளி – 2 (பெரியது)
- மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி
- சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
- மல்லித்தூள் – 3 தேக்கரண்டி
- மஞ்சள் பொடி – 1/4 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் – 2
- தேங்காய் துருவல் – 4 மேசைக்கரண்டி
- இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
- கரம் மசாலா – 1/4 தேக்கரண்டி
செய்முறை
ஆட்டுக்கால் பாயா குழம்பு செய்ய முதலில் அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ளவேண்டும். பிறகு தேவையான பொருட்களை அதாவது காய்கறிகளை தண்ணீர் கொண்டு அலச வேண்டும். எண்ணெய் மற்றும் உப்பு தேவையான அளவு இருத்தால் சுவையாக இருக்கம்.
முதலில் வெங்காயம், தக்காளி, மல்லித்தழை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
பின் தேங்காய் மற்றும் முந்திரிப்பருப்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். பிறகு ஆட்டுக்காலை சுத்தம் செய்து கழுவி வைக்கவும்.சுத்தம் செய்த ஆட்டுக்காலை மைதாமாவு, சிறிது உப்பு சேர்த்து கலந்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.
பின் ஆட்டுக்காலை கழுவி குக்கரில் போட்டு நறுக்கிய வெங்காயம், தக்காளி, மல்லித்தழை, மசாலாத்தூள் வகைகள், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து கால் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.கொதி வந்த பின்பு குக்கரை மூடி 2-3 விசில் வந்த பின்பு அடுப்பை குறைத்து வைக்கவும்.
இளங்காலாக இருந்தால் அரைமணி நேரம், சிறிது வழுவாக இருந்தால் ஒரு மணி நேரம் வைத்து வேக வைக்கவும் கால் வெந்தவுடன் அரைத்த தேங்காய், முந்திரிபருப்பு விழுதை சேர்க்கவும்.
அடுப்பை குறைந்த சூட்டில் வைத்து கால் மணி நேரம் கொதிக்க விடவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிது வெங்காயம், கருவேப்பிலையை இளஞ்சிவப்பாக வதக்கி சால்னாவில் சேர்க்கவும். சுவையான சத்தான ஆட்டுக்கால் சால்னா ரெடி.