அசைவம்பிரியாணிபிரியாணி அசைவம்

ஆம்பூர் மட்டன் பிரியாணி

ambur mutton biryani

சமைக்க தேவையானவை


 • மட்டன் ஒரு கிலோ
 • பாசுமதி அரிசி – ஒரு கில
 • கொத்துமல்லித்தழை – ஒரு கொத்து
 • இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
 • வெங்காயம் – அரை கிலோ
 • நெய் – 50 மில்லி
 • எலுமிச்சை -அரை பழம்
 • தக்காளி – அரை கிலோ
 • எண்ணெய் – 200 மில்லி
 • பச்சை மிளகாய் ஆறு
 • காஷ்மீரி சில்லி மிளகாய் தூள் 2 தேக்கரண்டி
 • பிரியாணி இலை
 • தயிர் ஒரு கோப்பை
 • புதினா -ஒரு கொத்து
 • பட்டை, ஏலம், கிராம்பு -தலா இரண்டு
 • உப்பு தூள் -தேவையான அளவு

செய்முறை

மட்டன் பிரியாணியில் ஆம்பூர் பிரியாணியின் சுவையே தனி. சமைத்துப் பாருங்கள் அப்பொழுது தெரியும் இந்த பிரியாணியின் சுவை. சரி வாங்க இதை எப்படிச் செய்வது என்பது குறித்து பார்ப்போம். முதலில் பிரியாணி செய்ய அரிசியை தண்ணீரில் கழுகி ஒரு பாத்திரத்தில் ஊற வைக்கவும். பின்பு மட்டனை நன்கு கழுவி தண்ணீரை வடிக்கவும்.

பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாத்திரம் சுடானதும் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, ஏலம், கிராம்பு , பிரியாணி இலை போட்டு வெடிக்க விட்டு .பின்பு அறிந்து வைத்துள்ள வெங்காயத்தை எண்ணெயுடன் சேர்த்து நன்கு வதக்கவும்.

அதன் பிறகு வெங்காயம் வதக்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி மிளகாய் தூள், பழுத்த பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு புதினா, தயிர் சேர்க்கவும், அடுத்து தக்காளியும் கொத்துமல்லியும் சேர்க்கவும். அடுத்து உப்பு, மட்டன் சேர்த்து நன்கு கிளறி, தீயை சிம்மில் வைத்து மட்டனை வேக விடவும். மட்டன் வெந்து கூட்டு கிரேவி பதம் வரும் வரை வேக விடவும்.

மட்டன் அதிகமாக இருந்தால் அதற்கு தகுந்தாற் போல் தண்ணீர் சேர்க்கவும் . ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்னேகால் வீதம் தண்ணீர் அளந்து ஊற்றவும். தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரிசியை நன்கு அலசி போட்டு கொதிக்கவிடவும்.

கடைசியாக சிறிது நெய், லெமன் பிழிந்து, பாதி அளவு வற்றும் போது அடுப்பின் மேல் தம் போடும் கருவியை வைத்து சாப்பாடு சட்டியின் மேல் கனமான பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் தம்மில் விடவும்.பிறகு லேசாக மேலிருந்து கீழாக சாதம் குழையாமல் பிரட்டி எடுக்கவும். சுவையான ஆம்பூர் ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி ரெடி.

 

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button