குழம்பு

ஆரோக்கியமான சுக்கு குழம்பு

Sukku Kulambu

சமைக்க தேவையானவை


  • சுக்கு -ஒரு சிறிய துண்டு
  • சுக்கு -ஒரு சிறிய துண்டு
  • மிளகு -2 டீஸ்பூன்
  • மிளகாய்த்தூள் -அரை டீஸ் பூன்
  • வெந்தயம் -ஒரு டீஸ்பூன்
  • நறுக்கிய தக்காளி -கால் கப்
  • கடுகு, உளுத்தம்பருப்பு -தலா அரை டீஸ் பூன்
  • புளி -பெரிய நெல்லிக்காய் அளவு
  • நறுக்கிய சின்ன வெங்காயம் -ஒரு கப்
  • மஞ்சள் தூள் -கால் டீஸ்பூன்
  • கறிவேப் பிலை -சிறிதளவு
  • எண்ணெய், உப்பு -தேவையான அளவு


செய்முறை


முதலில் சுக்கு, மிளகு, வெந்தயத்தை எண்ணெய் விடாமல் தனித்தனியே வறுத்து, ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவேண்டும். பிறகு கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும்.

இதில் நறுக்கிய தக்காளியை ப் போட்டு வதக்கி, புளிக் கரைசல் விட்டு உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்க் கவும். எண்ணெய் பிரிந்து வரும்போது பொடித்த சுக்கு கலவையைச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

கூடுதல் தகவல்: சுக்கு குழம்பு செய்ய முதலில் அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ளவேண்டும். பிறகு தேவையான பொருட்களை அதாவது காய்கறிகளை தண்ணீர் கொண்டு அலச வேண்டும். எண்ணெய் மற்றும் உப்பு தேவையான அளவு இருத்தால் சுவையாக இருக்கும்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்
Source
Image

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button