
சமைக்க தேவையானவை
- இளம் இஞ்சி – 25 கிராம்,
- பிஞ்சு பச்சை மிளகாய் – 10,
- புளி ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு, அச்சு வெல்லம் – ஒன்று,
- எண்ணெய் 4 டீஸ்பூன்,
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கவும்வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு பச்சை மிளகாய், இஞ்சியை சேர்த்து வதக்கி புளி, பொடித்த வெல்லம், உப்பு சேர்த்து, சிறிதளவு நீர்விட்டு மிக்ஸியில் அரைக்கவும்.
மீதமுள்ள எண்ணெயை வாணலியில் விட்டு, அரைத்து வைத்த விழுதைச் சேர்த்து நன்றாக கிளறவும். தொக்கு நன்றாக வதங்கி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது கிளறி இறக்கவும். சூப்பரான இஞ்சி பச்சை மிளகாய் தொக்கு ரெடி.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1