இட்லிசைவம்

இட்லி மஞ்சூரியன்

idli manchurian

சமைக்க தேவையானவை


  • இட்லி – 8
  • மைதா மாவு – 2 ஸ்பூன்
  • சோள மாவு – 1/2 ஸ்பூன்
  • வெங்காயம் – 1/2 கப்
  • இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  • பொடியாக நறுக்கிய இஞ்சி
  • பூண்டு – 1 ஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 2
  • மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  • சோயா சாஸ்
  • தக்காளி சாஸ் – தேவைகேற்ப
  • எண்ணெய், உப்பு – தேவைகேற்ப


செய்முறை


முதலில் இட்லியை துண்டுகளாக நறுக்கிகொள்ளவும் ஒரு பாத்திரத்தில் மைதா, சோள மாவு, இஞ்சி பூண்டு விழுது, உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து இதில் இட்லி துண்டுகளை நன்றாக பிரட்டி பொன்னிறமாக பொரித்தெடுங்கள்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை வதக்கவும் இதனுடன் மிளகாய் தூள், சோயா மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து கிரேவியாக சமைக்கவும். இந்த கிரேவியில் ஏற்கனவே பொரித்துவைத்த இட்லியை சேர்த்து 2 நிமிடங்கள் சமைத்தால் சூடான, சுவையான இட்லி மஞ்சூரியன் தயார்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button