பாஸ்ட் ஃபுட்பாஸ்தா

இத்தாலியன் பாஸ்தா

Italian pasta

சமைக்க தேவையானவை


 • பாஸ்தா – ஒரு கப்
 • பூண்டு – 2 பற்கள்
 • பேசில் தழை – 4
 • உப்பு – தேவைக்கு
 • வெங்காயம் – ஒன்று
 • சிகப்பு பழுத்த மிளகாய் – 3
 • ஒரீகனோ, பார்ஸ்லே, தைம், ரோஸ்மரி – தலா 2 சிட்டிகை
 • துருவிய மொசரேல்லா சீஸ் – 4 தேக்கரண்டி
 • தக்காளி – 200 கிராம்
 • மிளகுத் தூள் – அரை தேக்கரண்டி
 • ஆலிவ் ஆயில் – கால் தேக்கரண்டி
 • தேன் – கால் தேக்கரண்டி


செய்முறை


முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். அதில் பாஸ்தாவைப் போட்டு பிசுபிசுப்பு இல்லாமல் பதமாக வேக வைக்கவும். பின்பு வெந்ததும் குளிர்ச்சியான தண்ணீரில் மூழ்க விட்டு எடுத்து ஆற விடவும்.

தக்காளியைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு வேக வைத்து எடுத்து, அதன் தோலை நீக்கி விட்டு கூழாக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெங்காயம், பூண்டு, மிளகாய், கூழாக்கிய தக்காளி, தேன், மிளகுத் தூள், ஒரீகனோ, பார்ஸ்லே, தைம், ரோஸ்மரி மற்றும் உப்பு சேர்த்து கலந்து சிம்மில் வைக்கவும்.

அதனுடன் வேக வைத்து ஆற வைத்த பாஸ்தாவைச் சேர்த்துக் கலக்கவும். பாஸ்தாவைப் பரிமாறும் தட்டுகளில் போட்டு சீஸைத் தூவி சூடாகப் பரிமாறவும்.பின்னர் இந்தச் சாஸை ப்ரெட்டில் தடவி, அதன் மேல் காய்கறிகள், சீஸ் தூவி அவனில் 350 டிகிரியில் 5 நிமிடங்கள் வைத்து எடுத்த குட்டி ப்ரெட் பீட்ஸா . பரிமாறவும்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button