சைவம்பூரி

இனிப்பு பூரி

Sweet poori

சமைக்க தேவையானவை


  • கோதுமை மாவு – ஒரு கப்
  • மைதா மாவு – ஒரு கப்
  • கடலைப் பருப்பு – கால் கப்,
  • தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
  • பொடித்த சர்க்கரை – 6 டேபிள் ஸ்பூன் அல்லது பொடித்த வெல்லம் – அரை கப்
  • ஏலக்காய்தூள் – கால் டீஸ்பூன்
  • நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
  • எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
  • உப்பு – ஒரு சிட்டிகை


செய்முறை


கோதுமை மாவு, மைதா மாவு இரண்டையும் கலந்து துளி உப்பு, தண்ணீர் சேர்த்துப் பிசையவும். கடலைப்பருப்பை வேகவைத்து, கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் நெய்யைச் சூடாக்கி, கடலைப்பருப்பு, பொடித்த சர்க்கரை, தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

மாவை சிறு உருண்டைகளாக்கி, உள்ளே பூரணம் வைத்து, மூடி, பூரிகளாகத் தேய்த்து பொரித் தெடுக்கவும்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்
Source
Image

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button