அசைவம்இறால்

இறால் ஆம்லெட்

prawn omelet

சமைக்க தேவையானவை


  • இறால் – 100 கிராம்
  • முட்டை – 3
  • மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
  • இஞ்சி-பூண்டு பேஸ்ட் – அரை டீஸ்பூன்
  • எண்ணெய் – தேவையான அளவு
  • மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 6
  • சின்னவெங்காயம் – 15
  • மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு


செய்முறை


முதலில் சுத்தம் செய்த இறாலை, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், இஞ்சி-பூண்டு பேஸ்ட், உப்பு சிறிது சேர்த்து புரட்டி 10 நிமிடம் ஊற வைக்கவேண்டும். பின் முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு நன்கு அடித்துக் கொள்ளவும்.

பிறகு இத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் மிகப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும். பின் ஒரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு .பின் ஊற வைத்துள்ள இறால் கலவையைச் சேர்த்து நன்கு வதக்கவேண்டும்.

பிறகு சிறிது நேரம் வதக்கினால், இறாலில் உள்ள நீர் பிரிந்து நன்றாக வெந்து வரும். பின்னர் இறாலை முட்டைக்கலவையில் சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.

பிறகு தாளிப்புக் கரண்டி அல்லது ஆழமான குழிக்கரண்டியை அடுப்பில் வைத்து குழியில் எண்ணெய் விடவேண்டும் . பிறகு எண்ணெய் சூடானதும் கலக்கி வைத்துள்ள முட்டை, இறால் கலவையை குழியில் ஊற்றி அடுப்பைக் குறைத்து வேகவிடவும். பின்னர் பணியார குச்சியால் ஆம்லேட்டை மறுபுறம் கவனமாக, திருப்பி விட்டு வேகவிடவேண்டும்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்
Source
Image

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button