அசைவம்இறால்

இறால் உருண்டைக் கலியா

prawn roll

சமைக்க தேவையானவை


இறால் – கால் கப்
பொட்டுக்கடலை – மூன்று மேசைக்கரண்டி
சிறிய வெங்காயம் – ஐந்து
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
எண்ணெய் – பொரிப்பதற்கு
உப்பு – தேவையான அளவு
பெருங்காய தூள் – ஒரு சிட்டிகை
சோம்பு – அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் – ஒன்று
முட்டை – ஒன்று
சீரகம் – அரை தேக்கரண்டி
தேங்காய் துருவல் – ஒரு கப்


செய்முறை


இறால் சமையலில் வித்தியாசமான ஒரு டிஸ் உருண்டைக் கலியா ஆகும். சைனாவில் இது அதிகமாக உண்ணப்படுகின்றது. இது ரோல் செய்து செய்யப்படும் ஒரு வகை டிஸ் ஆகும். இதன் சுவை அருமையாக இருக்கும். வித்தியாசமாக சாப்பிட நினைப்பவர்கள் இந்த டிஸ் செய்து சாப்பிடலாம். அசைவப் பிரியர்களுக்கு இது அருமையான உணவாகும்.

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்து கொள்ளவும். அனைத்தையும் மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கலியாவை சிறு உருண்டையாக எடுத்து தட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.(தட்டும் பொழுது கையில் ஓட்டினால் சிறிது தண்ணீர் தொட்டுக் கொண்டு தட்டவும்).உருண்டைக்கலியா தயார்.

இதை பருப்பு குழம்பு, சாம்பார் போன்றவற்றுடன் சாதத்திற்கு தொட்டு சாப்பிடலாம். நல்ல சுவையாக இருக்கும். சிறுவர்கள் மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள். புரோட்டீன் அதிகம் நிறைந்த மீன் உணவாகும். ஆதலால் இதை ஒருமுறை டிரை செய்து பாருங்கள்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்
Source
Image

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button