
சமைக்க தேவையானவை
- இறால் – கால் கிலோ
- காலிஃப்ளவர் – உள்ளங்கை அளவு உள்ள பூ
- கொத்தமல்லி – மூன்று டேபிள் ஸ்பூன் பொடியாக அரிந்தது
- வினிகர் – ஒரு டீஸ்பூன்
- பட்டை – சிறிய துண்டு
- எண்ணெய் – நான்கு டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
- மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்
- பச்சை மிளகாய் – இரண்டு
- வெங்காயம் – மூன்று (பொடியாக அரிந்தது)
- தக்காளி – இரண்டு ( மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்)
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – மூன்று டீஸ்பூன்
செய்முறை
இறாலுடன் காலிஃப்ளவர் கலந்து செய்யும் டிஸ் சுவையே தனிதான். சமைத்துப் பாருங்கள் பிறகு தினமும் இதை சாப்பிட வேண்டும் என்ற ஆவல் எழாமல் இருப்பதில்லை. வாங்க ருசியான இந்த அசைவ சமையலை எப்படிச் செய்வது என்று பார்ப்போம். முதலில் இறாலை சுத்தம் செய்து அதன் வயிற்றில் உள்ள அழுக்கு மற்றும் முதுகில் உள்ள அழுக்கை கத்தியால் கீறி எடுத்து நான்கு ஐந்து முறை கழுவி தனியாக வைக்கவும்.
காலிஃப்ளவரை தனித் தனியாக பிரித்தெடுத்து கொதிக்கிற தண்ணீரில் ஒரு டீஸ்பூன் வினிகர் விட்டு கழுவி அதையும் தனியாக வைக்கவும். எண்ணெயை காயவைத்து ஒரு சிறிய பட்டை போட்டு, வெங்காயம், இஞ்சி பூண்டு போட்டு வதக்கி பாதி கொத்தமல்லி போட்டு பச்சை மிளகாய் ஒடித்து போடவும்.
தக்காளி அரைத்து ஊற்றவும். பிறகு மிளகாய்தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு நல்ல கிளறி விடவும். இறால் சீக்கிரம் வெந்து விடும், காலிஃப்ளவரும் வெந்நீரில் போட்டு எடுத்ததால் அதுவும் சீக்கிரம் வெந்து விடும் ஆகையால் இந்த இரண்டையும் கடைசியில் போட்டு நன்கு கிளறி தீயை சிம்மில் வைத்து ஐந்து நிமிடம் வேக விட்டு கொத்தமல்லி தூவி இறக்கவும்.