அசைவம்இறால்

இறால் சுக்கா மசாலா

Shrimp Sukkah Spice

சமைக்க தேவையானவை


  • தேங்காய் – 1/2 கப்
  • வரமிளகாய் – 5
  • பூண்டு – 4-5
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • சோம்பு – 2 ஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய் – 4 ஸ்பூன்
  • வெங்காயம் – 1
  • மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • இறால் – 500 கிராம்
  • மிளகுத் தூள் – 2 ஸ்பூன்
  • கரம் மசாலா – 1 ஸ்பூன்


செய்முறை


முதலில் தேவையான அளவு இறாலை எடுத்து கொண்டு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு தேங்காய், வரமிளகாய், சோம்பு, பூண்டு, கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து மிக்சியில் பேஸ்ட் பதத்திற்கு அரைத்து கொள்ள வேண்டும்.

அடுப்பில் வாணலியை வைத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும். பின்னர் சுத்தம் செய்த இறால், மஞ்சள் தூள், உப்பு ஆகியவை ஒன்றுடன் ஒன்று சேரும் வரை கிளற வேண்டும்.

அரைத்து வைத்த மசாலைவை சேர்த்து ஒரு 10 நிமிடம் வேக வைக்கவும். கடைசியில் மிளகாய் தூள், கரம் மசாலா ஆகியவை சேர்த்து நன்றாக கிளறினால் சுவையான இறால் சுக்கா தயார்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button