அசைவம்இறால்

இறால் சொட்டா

prawn Satta

சமைக்க தேவையானவை


 • இறால் (பெரியது) – 8
 • இஞ்சி, பூண்டு விழுது – ஒரு மேசைக்கரண்டி
 • கார்ன் ஃப்ளார் – ஒரு மேசைக்கரண்டிஎண்ணெய் – பொரிப்பதற்கு
 • கொத்தமல்லித் தழை – சிறிதளவு
 • சோம்பு – அரை தேக்கரண்டி
 • பட்டை – ஒரு இன்ச் அளவு
 • ஏலக்காய் – ஒன்று
 • காய்ந்த மிளகாய் – 4
 • பொட்டுகடலை – கால் கப்
 • தேங்காய் துருவல் – 2 தேக்கரண்டி
 • சின்ன வெங்காயம் – 15


செய்முறை


முதலில் சின்ன வெங்காயத்தை தோல் உரித்து கழுவி எடுத்துக் கொள்ளவும். இறாலை நன்கு சுத்தம் செய்து மஞ்சள் பொடி சேர்த்து பிசறி நன்கு கழுவி விடவும். கழுவிய இறாலுடன் கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

கொதித்து சிறிது தண்ணீர் இருக்கும் நிலையிலேயே வெங்காயம், தேங்காய் துருவல், சோம்பு, பட்டை, ஏலக்காய், மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட்டு கொதிக்க விடவும்.

தண்ணீர் சுண்டியதும் சிம்மிலேயே மூன்று நிமிடம் வரை வைத்து கிளறி பின் அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு பொடி செய்து எடுத்துக் கொள்ளவும். அதன்பின், ஆறிய இறால் கலவையை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.

அரைத்தவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கார்ன் ஃப்ளார், பொடியாக நறுக்கின மல்லி தழை, மூன்று தேக்கரண்டி பொடித்த பொட்டுகடலை பொடி ஆகியவற்றை சேர்க்கவும்.

எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து உருண்டையாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறு, சிறு கட்லட் போல் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். சுவையான இறால் சொட்டா தயார். இது சாம்பார் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள மிகவும் நன்றாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button