
சமைக்க தேவையானவை
- இறால் – 250 கிராம்
- தக்காளி – அரை துண்டு
- இஞ்சி பூண்டு விழுது – அரை மேசைக்கரண்டி
- தேங்காய் துருவல் – ஒரு மேசைக்கரண்டி
- வெங்காயம் – ஒன்று (சிறிது)
- உப்பு – தேவைக்கேற்ப
- காய்ந்த மிளகாய் – 2
- கரம் மசாலா – ஒரு தேக்கரண்டி
- மிளகு தூள் – ஒரு மேசைக்கரண்டி
- கடுகு – சிறிது
- மிளகாய்த்தூள் – ஒரு மேசைக்கரண்டி
- கறிவேப்பிலை – சிறிது
- மல்லி இழை – சிறிது
செய்முறை
முதலில் இறாலை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளியை துண்டுகளாக நறுக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வெடிக்க விடவும். பின்பு வெங்காயத்தை சேர்த்து லேசாக வதங்கியபின். இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். உப்பு மற்றும் தேங்காய் துருவலை போட்டு நன்கு வதக்கவும்.
மிளகாய் தூளை சேர்த்து வதக்கவும்நன்கு வதங்கிய பின் இறாலை சேர்த்து ஒரு நிமிடத்திற்கு கிளறவும். பின் கரம் மசாலா மற்றும் மல்லி இழை சேர்த்து கிளறி மூடி போட்டு சிம்மில் வைத்து 10 நிமிடம் நன்கு வேக விடவும். நன்கு எண்ணெய் பிரிந்து வந்ததும் மிளகு தூளை சேர்த்து ஒரு நிமிடம் வரை கிளறி இறக்கவும்.பின்பு பரிமாறவும்
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1