அசைவம்இறால்

இறால் தொக்கு

prawn thokku

சமைக்க தேவையானவை


  • இறால் – 1/2 கிலோ
  • தக்காளி – 2 நடுத்தரமானது
  • எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
  • வெங்காயம் – 2 பெரியது
  • வெந்தயம் – 5
  • இஞ்சி அரைத்து -1/2தேக்கரண்டி
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • மஞ்சள்தூள்
  • பச்சை மிளகாய் – 2
  • பூண்டு அரைத்தது 1 தேக்கரண்டி
  • சோம்பு தூள் – 1/2 தேக்கரண்டி
  • மல்லித்தூள் -2 தேக்கரண்டி– 1/4 தேக்கரண்டி
  • சோம்பு – 1/2 தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு


செய்முறை


முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றவும். பின்பு அது சூடானவுடன் சோம்பு வெந்தயம் போடவும். லேசாக நிறம் மாறியதும் வெங்காயம் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போடவும். நன்றாக வதங்கியதும் இஞ்சிபூண்டு கலவையை போடவும் ,வதங்கியதும் தக்காளியை போடவும்.

தக்காளி போட்டதும் உடன் உப்பு, மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் போட்டு வதக்கவும்.
நன்கு வதங்கியதும் அதில் இறாலை போடவும் பத்து நிமிடம் வதக்கினால் போதும். இறக்கும்போது மிளகுத்தூள் சோம்புத்தூள் போட்டு கிளறி விடவும். சுவையான இறால் தொக்கு ரெடி.பின்பு பரிமாறவும்.

வீடியோ இணைப்பு

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்
Source
Image

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button