
சமைக்க தேவையானவை
- இறால் – 200 கிராம்
- கறிவேப்பிலை – சிறிதளவு
- அரிசி மாவு – 50 கிராம்
- எண்ணெய் – 200 மில்லி
- பச்சை மிளகாய் – சிறிதளவு
- சோம்பு தூள் – சிறிதளவு
- பொரிக்கடலை – 50 கிராம்
- பூண்டு – சிறிதளவு
- பாசி பருப்பு மாவு – 50 கிராம்
- கடலை மாவு – 100 கிராம்
- உப்பு – சிறிதளவு
செய்முறை
முதலில் இறாலை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும். பின்பு வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, உப்பு, சோம்பு தூள், எல்லாவற்றையும் இறாலில் ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும்.
அதனுடன் அரிசி மாவு, பாசி பருப்பு மாவு, சிறிது சூடாக்கிய எண்ணெய் சேர்த்து தண்ணீர் தெளித்து உதிர்ந்து விடும் பக்குவத்தில் பிசைய வேண்டும்.
பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு பக்கோடாவை பக்குவமாக உதிர்த்து போட்டு பொன்னிறமாக வெந்ததும் இறக்கி பின்பு பரிமாற வேண்டும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1