
சமைக்க தேவையானவை
- சுத்தம் செய்த இறால் – 500 கிராம்
- அரிசிமா – 50 கிராம்
- கடலை மா -150 கிராம்
- கோதுமைமாவு – 2 தேக்கரண்டி
- எலுமிச்சம்பழம் – 1
- மிளகாய்த்தூள் -5 தேக்கரண்டி
- மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
- பஜ்ஜி கலர் ,எண்ணெய் , உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் இறாலுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேக வைத்து நீரை வடித்து எடுக்கவேண்டும். பிறகு அவித்த இறாலுடன் முன்று தேக்கரண்டி மிளகாய்த்தூள் ,எலுமிச்சம்பழச்சாறு கலந்து எண்ணெயில் நன்கு வதக்கி ஆற வைக்கவும்.
பின் ஒரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி மிளகாய்த்தூள் , கோதுமை மாவு , கடலை மாவு அரிசிமாவு, பஜ்ஜி கலர், உப்பு என்பன சேர்த்து பஜ்ஜி மாப்பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கொதிக்க வைக்கவும். இறாலை பஜ்ஜி மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுத்து பரிமாறவும்.
வீடியோ இணைப்பு
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1