அசைவம்இறால்வெரைட்டி ரைஸ்

இறால் பிரைடு ரைஸ்

Shrimp Fried Rice

சமைக்க தேவையானவை


  • இறால் – கால் கிலோ
  • பாசுமதி அரிசி – 4 கப்
  • வெங்காயம் – 4
  • முட்டை – 4
  • பூண்டு – 1 டீஸ்பூன்
  • கேரட் – 1
  • வெங்காயத்தாள் – சிறிதளவு
  • மீன் சாஸ் – 1 டீஸ்பூன்
  • சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
  • மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்
  • கொத்தமல்லி தழை – 1 கட்டு


செய்முறை


கொத்தமல்லி, கேரட், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். இறாலை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். முட்டையை அடித்து கலக்கி வைத்துக்கொள்ளவும். பாசுமதி அரிசியை உதிரியாக வேகவைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் இறாலை கொட்டி பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். அதனுடன் பூண்டை சேர்த்துக்கொள்ளவும்.

அடுத்து கேரட்டையும் சேர்த்து வதக்கவும். முட்டையையும் ஊற்றி கட்டி பிடிக்காமல் கிளறி விடவும். நன்கு வெந்ததும் வேக வைத்த சாதத்தை கொட்டி கிளறவும். அதனுடன் சோயா சாஸ், மீன் சாஸ், மிளகுத்தூள், வெங்காயம், வெங்காய்த்தாள் போன்றவற்றை கலந்து வேகவிடவும். அவை வெந்து பிரைடு ரைஸ் பதத்துக்கு வந்ததும் கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும். சூப்பரான இறால் பிரைடு ரைஸ் ரெடி.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button