அசைவம்இறால்

இறால் மஞ்சூரியன்

prawn manchurian

சமைக்க தேவையானவை


  • குட்டி இறால்(சுத்தம் செய்தது) – 250கிராம்
  • சர்க்கரை – 1டீஸ்பூன்
  • மிளகு தூள் – 1டீஸ்பூன்
  • எண்ணெய் – 8டேபிள்ஸ்பூன்
  • உப்பு – தேவைக்கு
  • ரெட்சில்லி சாஸ் – 2டேபிள்ஸ்பூன்
  • டொமெட்டோ சாஸ் – 3டேபிள்ஸ்பூன்
  • சில்லி ஃப்லேக்ஸ் – 1டேபிள்ஸ்பூன்
  • சோயா சாஸ் – 2டேபிள்ஸ்பூன்
  • வெங்காயத்தாள் – 2கொத்து
  • பூண்டு – 10பல்
  • பெரிய வெங்காயம் – 1
  • குடை மிளகாய் – 1


செய்முறை


முதலில் இறாலை சுத்தம் செய்து, அதில் உப்பு மிளகு தூள் சேர்த்து பிரட்டி 15நிமிடம் ஊற வைக்கவும். குடை மிளகாயை பெரிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.பெரிய வெங்காயத்தையும்,பூண்டையும் பொடியாக(துவரம்பருப்பு சைஸ்) நறுக்கி வைக்கவும்.வெங்காய தாளையும் நறுக்கி கொள்ளவும்.

இறாலை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுத்து கொள்ளவும்.இப்போது பொரித்த எண்ணெயிலேயே, வெங்காயத்தை போட்டு சிம்மில் வைத்து 10நிமிடம் நன்றாக வதக்கவும்.

பிறகு அதில் சில்லி ஃப்லேக்ஸ், இந்த கலவைக்கு மட்டும் தேவையான சிறிது உப்பு, சர்க்கரை, சோயா சாஸ், சில்லி சாஸ், டொமெட்டோ சாஸ் சேர்த்து சாஸின் பச்சை வாசனை போகும் வரை வதக்கி பிறகு குடை மிளகாய், வெங்காய தாள் சேர்த்து ஒரு சுற்று வதக்கி பொரித்த இறாலை சேர்த்து பிரட்டி இறக்கவும்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்
Source
Image

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button