அசைவம்இறால்

இறால் மீன் கறி

prawn fish gravy

சமைக்க தேவையானவை


  • இறால் மீன் – 250 கிராம்
  • மிளகாய் வற்றல் – 6
  • எண்ணெய் – 5 மேசைக்கரண்டி
  • சீரகம் – 3 தேக்கரண்டி
  • தேங்காய் – 3 சில்
  • சின்ன வெங்காயம் – 25
  • மஞ்சள் பொடி – அரைத் தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு


செய்முறை


முதலில் இறால் மீனைத் தோல் நீக்கிச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பின்பு மிளகாய் வற்றல், தேங்காய், சீரகம் ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

சின்ன வெங்காயத்தை தோலுரித்து, நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் 5 கரண்டி எண்ணெய் விட்டு அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்க வேண்டும்.

பின்னர் வெங்காயம் சிவந்தவுடன், அரைத்த மசாலா, மஞ்சள் தூள் மற்றும் தேவையான உப்பு சேர்க்க வேண்டும். அத்துடன் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலினையும் போட்டு நன்கு கிளறி வேக விட வேண்டும்.

சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இறால் மீன் நன்கு வெந்து, குழம்பு கெட்டியானவுடன் இறக்கி விட வேண்டும். பின்பு பரிமாறவும்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்
Source
Image

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button