அசைவம்இறால்

இறால் முட்டை குழம்பு

prawn egg gravey

சமைக்க தேவையானவை


 • பெரிய இறால் – பத்து
 • முட்டை – இரண்டு
 • வெங்காயம் – இரண்டு
 • எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்
 • எலுமிச்சை சாறு – அரை டீஸ்பூன்
 • கொத்தமல்லி – சிறிது
 • உப்பு – தேவையான அளவு
 • மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
 • பச்சை மிளகாய் – இரண்டு
 • பட்டை – ஒரு சிறிய துண்டு
 • மிளகாய் தூள் – ஒன்றரை தேக்கரண்டி
 • இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு டேபிள் ஸ்பூன்
 • தக்காளி – இரண்டு


செய்முறை


இறாலை சுத்தம் செய்து நடுவில் மேலும், கீழும் உள்ள அழுக்கை எடுத்து கழுவி தனியாக வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெயை காய வைத்து பட்டை, வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி பச்சை மிளகாய் ஒடித்து போட்டு தக்காளியை துண்டுகளாக்கி சேர்க்கவும்.

இரண்டு நிமிடம் மூடி போட்டு வேகவிடவும். பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு சுத்தம் செய்து வைத்திருக்கும் இறாலை போட்டு ஒரு கிளறு கிளறி மூடி போட்டு பத்து நிமிடம் வேக வைக்கவும்.

முட்டையில் எலுமிச்சை சாறு பிழிந்து நல்ல அடித்து வெந்து கொண்டிருக்கும் இறாலின் மீது பரவலாக ஊற்றவும். ஊற்றி மூடி போட்டு சிம்மில் வைத்து வேக விடவும்.

இரண்டு நிமிடம் கழித்து தோசை திருப்புவது போல் முட்டையோடு சேர்ந்து இறலை திருப்பி விட்டு மறுபடியும் மூடிபோட்டு சிம்மில் வைத்து வேக விடவும். வெந்ததும் நல்ல ஒரு கிளறு கிளறி கொத்தமல்லி தூவி இறக்கவும்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்
Source
Image

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button