அசைவம்இறால்வடை

இறால் வடை

prawn vadai recipe

சமைக்க தேவையானவை


  • இறால் – ஒரு கப்பொட்டுக்கடலை – கால் கப்
  • சோம்பு தூள் – ஒரு தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
  • தேங்காய்த் துருவல் – அரை கப்
  • மிளகாய் தூள் – அரை மேசைக்கரண்டி
  • சின்ன வெங்காயம் – அரை கப்
  • உப்பு – ஒரு தேக்கரண்டி


செய்முறை


முதலில் இறாலை சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்பு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பொட்டுக்கடலை, தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இறாலையும் நன்கு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு தேங்காய் விழுதுடன் அரைத்த இறால், மிளகாய்த் தூள், சோம்பு தூள், மஞ்சள் தூள், உப்பு, நறுக்கின வெங்காயம் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்த மாவை உருண்டையாக உருட்டி கையில் வைத்து தட்டி எண்ணெயில் போட வேண்டும். பின்பு பரிமாறவும்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button