இனிப்புபாயாசம்

இளநீர் பாயாசம்

Iḷanīr pāyācam

சமைக்க தேவையானவை


  • கொழுப்பு நிறைந்த பால் – 1 1/2 கப்
  • கெட்டியான தேங்காய் பால் – 1/2 கப்
  • இளநீர் கூழ் – 1/2 கப்
  • சர்க்கரை – 1 டேபிள் பூன்
  • கண்டென்ஸ்டு மில்க் – 2 டேபிள் பூன்
  • ஏலக்காய் பொடி – சிறிது
  • அரைப்பதற்கு
  • இளநீர் – 3/4 கப்


செய்முறை


முதலில் மிக்சர் ஜாரில் இளநீர் கூழ் மற்றும் இளநீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் பாலை நன்கு 5 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து, அதில் சர்க்கரை மற்றும் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து, ஓரளவு கெட்டியாகவும், க்ரீமியாகவும் மாறும் வரை நன்கு கிளறி இறக்கி, குளிர வைக்கவும்.

பின்பு அதில் அரைத்த இளநீர் கூழை உற்றி, அத்துடன் தேங்காய் பால் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி பரிமாறினால், சுவையான இளநீர் பாயாசம் தயார். இளநீர் பாயாசம் செய்வதற்கு, இளநீரின் உள்ளே உள்ள பகுதி மென்மையாக கூழ் போன்று இருக்க வேண்டும். கெட்டியாக தேங்காய் போன்று இருக்கக்கூடாது.

உங்களுக்கு வேண்டுமானால், இத்துடன் நெய்யில் வறுத்த முந்திரியை சேர்த்துக் கொள்ளலாம். இளநீர் பாயாசத்தின் சுவை அதிகரித்திருக்க வேண்டுமானால், பயன்படுத்தும் பால் கொழுப்பு நிறைந்ததாக இருக்க வேண்டும். கண்டென்ஸ்டு மில்க் இல்லாவிட்டால் பிரச்சனை இல்லை. ஆனால் இதை சேர்த்தால் சுவை இன்னும் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு பிடித்துள்ளதா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button