சைவம்பூரி

உருளைக்கிழங்கு பூரி

potato poori

சமைக்க தேவையானவை


  • கோதுமை மாவு – 2 கப்,
  • உருளைக்கிழங்கு – 2
  • எண்ணெய் அல்லது நெய் – ஒரு டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 2
  • இஞ்சி (துருவியது)- 1 டீஸ்பூன்
  • பொடியாக நறுக்கிய மல்லித்தழை – 2 டீஸ்பூன்
  • சீரகம் – கால் டீஸ்பூன்
  • எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
  • உப்பு – சுவைக்கேற்ப


செய்முறை


கோதுமை மாவுடன், சீரகம், உப்பு சேர்த்து, சிறிது எண்ணெய், தேவையான தண்ணீர் ஊற்றிப் பிசையவும். உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து மசித்துக்கொள்ளவும்.

பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கவும். மசித்த கிழங்குடன், பச்சை மிளகாய், இஞ்சி, மல்லித்தழை சேர்த்துக் கெட்டியாகக் கிளறிவைக்கவும்.

கோதுமை மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, உள்ளே உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து, பூரிகளாகத் திரட்டவும். எண்ணெயைக் காயவைத்து, பூரிகளைப் பொரித்தெடுக்கவும்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்
Source
Image

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button