
சமைக்க தேவையானவை
- உருளை கிழங்கு -1/4 கிலோ
- மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- சோள மாவு – 1 ஸ்பூன்
- அரிசி மாவு – 1 ஸ்பூன்
- எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் உருளைக்கிழங்கை வட்ட வட்டமாக நறுக்கி கொள்ள வேண்டும். காய்கறிகளில் உள்ள அழுக்கை எடுக்க வெந்நீரில் போட்டு உடனே எடுத்து விட வேண்டும். அதுபோல உருளைக்கிழங்கை போட்டு எடுத்து விட வேண்டும்.
பிறகு அதில் சோள மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், உப்பு மற்றும் லேசாக தண்ணீர் விட்டு பிசைந்து கொண்டு ஒரு அரை மணி நேரம் ஊறவைக்கும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றவும். சூடான பிறகு பிசைந்து வைத்த உருளை கிழங்கை சேர்த்து பொறித்து கொள்ளவும். சுவையான உருளை கிழங்கு வறுவல் தயார்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
1
+1
+1
+1