ரைஸ்வெரைட்டி ரைஸ்

உருளை மசாலா ரைஸ்

Potato Spice Rice

சமைக்க தேவையானவை


  • பச்சரிசி -1 கப்
  • உருளைக்கிழங்கு -2
  • மிளகாய்த்தூள் -1 ஸ்பூன்
  • தனியாத்தூள் -1 ஸ்பூன்
  • கரம் மசாலா -1/2 ஸ்பூன்
  • சீரகத்தூள் -1/2 ஸ்பூன்
  • நெய் -2 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன் உப்பு -தேவையான அளவு


செய்முறை


முதலில் பச்சரிசியை சுத்தமாக கழுவி தண்ணீரில் 3 முறை வரை அலசி கொள்ளவேண்டும். பிறகு அரிசியில் சிறிதளவு உப்பு சேர்த்து சாதத்தை வடித்து கொள்ளவும். சாதம் உதிரியாக கிடைக்க ஒரு பாத்திரத்தில் துண்டை போட்டு சாதத்தை அதன் மேல் கொட்டி ஆற விட வேண்டும். பிறகு உருளைக்கிழங்கை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்தவுடன் அதில் நறுக்கிய உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். நன்றாக வதங்கிய பிறகு மிளகாய் தூள், கரம் மசாலா, தனியாத்தூள், சீரகத்தூள் மற்றும் வடித்த அரிசி கொட்டி ஒன்றுடன் ஒன்று சேருவது போல நன்றாக கிளறவும். கடைசியில் 2 ஸ்பூன் நெய் சேர்த்து இறக்கினால் சுவையான உருளை கிழங்கு ரைஸ் தயார்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button