
சமைக்க தேவையானவை
- உளுத்தம் பருப்பு – 1 கப்
- வெங்காயம் – 1 கப் (பொடியாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் – 2 ( பொடியாக நறுக்கியது)
- இஞ்சி – 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
- கறிவேப்பிலை – 1 கையளவு
- கொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
- உப்பு – சுவைக்கேற்ப
- தண்ணீர் – தேவையான அளவு
- எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை
முதலில் உளுத்தம் பருப்பை நீரில் போட்டு 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை கழுவி, கிரைண்டரில் போட்டு, நீர் அதிகம் சேர்க்காமல் நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்த உளுத்தம் மாவை எடுத்துக் கொண்டு, அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் மாவை சிறு உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மொறுமொறுப்பான உளுந்து போண்டா ரெடி. இந்த போண்டாவை அப்படியே சாப்பிடலாம். விருப்பமுள்ளவர்கள் தேங்காய் சட்னியுடனும் சேர்த்து சாப்பிடலாம்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
1
+1
+1
+1