குழம்புமூலிகை உணவுகள்

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகை குழம்பு

Herbal Kulambu

சமைக்க தேவையானவை


  • தூதுவளை இலை – 10
  • முசுமுசுக்கை இலை – 10
  • வாதநாராயணன் இலை – 1
  • ஓமவல்லி இலை – 1
  • துளசி – சிறிதளவு
  • மிளகு, சீரகம் – தலா 1 டீஸ்பூன்
  • பூண்டு – 10 பல்
  • சின்ன வெங்காயம் – 5, பச்சைமிளகாய் – 2
  • புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
  • கடுகு, கறிவேப்பிலை – சிறிது, உப்பு, எண்ணெய் – தேவைக்கு.


செய்முறை


எல்லா இலைகளையும் சிறிது எண்ணெய் விட்டு 2 நிமிடம் வதக்கி அதனுடன் மஞ்சள் தூள், புளி, மிளகு, சீரகம், பூண்டு போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சைமிளகாயை சேர்த்து வதக்கி அரைத்த கலவையை ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து இறக்கவும்.

அவ்வளவுதான் மிக மிக எளிமையானது. இந்த மூலிகை குழம்பு உடலுக்கு மிகுந்த சக்தியை கொடுக்க கூடியது. கொரோனா போன்ற கொடி வைரஸ்களை எதிர்த்து போராடும் ஆற்றலை நம் உடலுக்கு கொடுக்கும். ஆகவே இந்த மூலிகை குழம்பினை அனைவரும் வீட்டில் வைத்து உங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு கொடுங்கள்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button