
சமைக்க தேவையானவை
- எள் – 1/4 கப்
- துவரம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
- சுட்டதேங்காய் – 4 சில்
- தனியா – 2 டேபிள்ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 6
- உளுத்தம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
- கல் உப்பு – தேவைக்கு
- கறிவேப்பிலை – 1 பிடி
- புளி – 1 எலுமிச்சை அளவு
- வறுக்க எண்ணெய்- 1 டேபிள்ஸ்பூன்
தாளிக்க
- நெய் – 1 டீஸ்பூன்
- கடுகு – 2 டீஸ்பூன்
செய்முறை
முதலில் கடாயில் எண்ணெயை காயவைத்து துவரம் பருப்பு, எள், தனியா, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு இவைகளை ஒவ்வொன்றாகச் சிவக்க வறுக்கவேண்டும்.
பிறகு இத்துடன் சுட்ட தேங்காய், கறிவேப்பிலையையும் சேர்த்து விழுதாக அரைக்கவேண்டும் .பின்னர் ஒரு பாத்திரத்தில் புளிக்கரைசல், உப்பு, அரைத்த விழுது சேர்த்துக் கொதிக்கவிடவும். கடைசியில் நெய்யில் கடுகு தாளித்து கொட்டி சுடச்சுடப் பரிமாறவும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1