அசைவ குழம்புஅசைவம்குழம்புமட்டன்

எள்ளு மட்டன் குழம்பு

Sesame mutton gravy

சமைக்க தேவையானவை


 • மட்டன் – அரைக் கிலோ
 • தயிர் – 2 தேக்கரண்டி
 • மிளகு – ஒரு தேக்கரண்டி
 • எள் – 2 தேக்கரண்டி
 • கிராம்பு – 2
 • முந்திரி – 6
 • பட்டை – சிறு துண்டு
 • வெங்காயம் – 3
 • தக்காளி – 3
 • பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
 • காய்ந்த மிளகாய் – 8
 • சீரகம் – ஒரு தேக்கரண்டி
 • பூண்டு – 10
 • எண்ணெய் – 3 தேக்கரண்டி
 • இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
 • முருங்கைக்காய் – ஒன்று
 • மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
 • நட்சத்திர மொக்கு – ஒன்று
 • இஞ்சி – சிறுத் துண்டு
 • உப்பு – ஒரு தேக்கரண்டி


செய்முறை


முதலில் மட்டன் மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, தயிர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் நன்கு வேக‌ வைக்கவும். பின்னர் வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம், பெருஞ்சீரகம், எள், பட்டை, கிராம்பு, நட்சத்திர‌ மொக்கு, முந்திரி, சேர்த்து நன்கு வதக்கவும்.

அதனுடன் வெங்காயம், காய்ந்த‌ மிளகாய், பூண்டு, இஞ்சி சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும். ஆற‌ வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

பின்பு மற்றொரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். இதனுடன் ஒரு வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி சேர்த்து வதக்கவும் வெங்காயம் தக்காளியுடன் அரைத்து வைத்துள்ள‌ வெங்காய‌ மசாலா கலவையை சேர்த்து நன்கு கிளறவும் பின்னர் 2 தக்காளியை விழுதாக அரைத்து சேர்க்கவும்.

அதனுடன் வேக‌ வைத்த‌ மட்டனை சேர்க்கவும் பிறகு ஒரு முருங்கைக்காய் நறுக்கி சேர்க்கவும். மட்டன் வேக‌ வைத்த‌ தண்ணீர் மற்றும் தேவையான‌ அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க‌ விடவும். நன்கு கொதித்த‌ பின்னர் கொத்த‌மல்லித் தழை தூவி இறக்கவும். சுவையான‌ மட்டன் கிரேவி தயார்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
55
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button