ஓட்ஸ்பிரியாணி சைவம்

ஓட்ஸ் பிரியாணி

Oatmeal biryani

சமைக்க தேவையானவை


 • ஓட்ஸ் – 150 கி
 • பட்டாணி – 50 கி
 • கேரட் – 50 கி
 • பீன்ஸ் – 50 கி
 • தக்காளி – 2
 • பட்டை – சிறிதளவு
 • கிராம்பு – சிறிதளவு
 • ஏலக்காய் – சிறிதளவு
 • புதினா – சிறிதளவு
 • கொத்தமல்லி – சிறிதளவு
 • கறிவேப்பிலை – சிறிதளவு
 • பிரிஞ்சி இலை – 1
 • இஞ்சி – சிறிதளவு
 • மிளகாய் தூள் – தேவையான அளவு
 • உப்பு – தேவையான அளவு
 • எண்ணெய் – 50 மிலி
 • நெய் – 3 டீஸ்பூன்


செய்முறை


உப்பை சிறிதளவு நீரில் கரைத்துக் கொள்ளவும். இந்நீரை ஓட்ஸ்ஸில் தெளித்து அவித்துக் கொள்ளவும்.  ஒரு வாணலியில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு அதில் வாசனைப் பொருட்களை சேர்த்து வறுக்கவும். பின்னர் இஞ்சி விழுது சேர்த்து அது வதங்கியவுடன் தக்காளி, மிளகாய் தூள் மற்றும் புதினா சேர்த்து நன்கு வதக்கவும்.

இதனுடன் பட்டாணி, கேரட், பீன்ஸ் சேர்த்து நன்கு வதக்கி அதனுடன் நீரும் உப்பும் சேர்த்து வேக விடவும். கிரேவி கெட்டியாகும் வரை வதக்கி பின்னர் அவித்த ஓட்ஸை அதனுடன் சேர்த்து கிளறி இறக்கவும்  கடைசியில் எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறலாம். சூடாக சாப்பிட மிகச் சுவையாக இருக்கும். டிபன் பாக்ஸிற்கு உகந்த பதார்த்தம் இது.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button