
சமைக்க தேவையானவை
- கசகசா – 1/2 கைப்பிடி
- சின்ன வெங்காயம் – 1 கைப்பிடி
- பூண்டு – 5 பல்
- மிளகு – 1 தேக்கரண்டி
- கொத்தமல்லி – 1 தேக்கரண்டி
- ஏலக்காய் – 1
- மஞ்சள் – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
- நல்லெண்ணெய், கடுகு
- கருவேப்பிலை – தாளிக்க
செய்முறை
முதலில் தாளிப்புப் பொருட்களைத் தவிர மற்றவற்றை நன்கு அரைத்துக்கொள்ளவேண்டும். கசகசாவை சிறிது நேரம் வெந்நீரில் ஊற விட்டு அரைக்கவும்.
அரைத்த விழுதை தண்ணீர் விட்டு கலக்கிக் நன்கு கொதிக்க விடவேண்டும் . கொதித்து பச்சை வாசனை போன பிறகு கடுகு, கருவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
இறுதியாகச் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்தால் சுவையாக இருக்கும். நல்ல தூக்கம் பெறுவதற்கு நம் முன்னோர்கள் சாப்பிட்ட குழம்பு இது.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1