
சமைக்க தேவையானவை
- கசகசா விதைகள் – 3 டேபிள் ஸ்பூன்
- பச்சரிசி – 1 டேபிள் ஸ்பூன்
- தேங்காய் – 1/2 கப்
- வெல்லம் – 3/4 கப்
- தண்ணீர் – 1 1/2 கப்
- ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்
- நெய் – 1 டேபிள் ஸ்பூன்
- முந்திரி – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் பச்சரிசியை மற்றும் கசகசாவை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வறுத்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் தேங்காய் மற்றும் சிறிது நீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் நீரை ஊற்றி, வெல்லத்தை முற்றிலும் உருக வைத்து இறக்கி வடிகட்டிக் கொள்ள வேண்டும். பிறகு வெல்லப் பாகை அரைத்து வைத்துள்ள கசகசா விழுதை சேர்த்து அடுப்பில் வைத்து கட்டிகளின்றி நன்கு கிளறி, 10-15 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். இந்த நேரத்தில் பாயாசமானது சற்று கெட்டியாக ஆரம்பிக்கும்.
பின் சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, பாயாசத்தில் ஊற்றி, அத்துடன் ஏலக்காய் பொடியை சேர்த்து நன்கு கிளறிவிட்டு இறக்கினால், சுவையான கசகசா பாயாசம் தயார்.
குறிப்பு: பாயாசம் மிகவும் கெட்டியாகிவிட்டால், அத்துடன் காய்ச்சிய பாலை தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளலாம். உங்களுக்கு இனிப்பு குறைவாக அல்லது அதிகமாக வேண்டுமானால், அதற்கு ஏற்ப வெல்லத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். ஒருவேளை உங்கள் வீட்டில் வெல்லம் இல்லாவிட்டால், அதற்கு பதிலாக சர்க்கரையை சேர்த்துக் கொள்ளலாம்.