
சமைக்க தேவையானவை
- கடுகு – 40 கிராம்
- வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – சிறிதளவு
- சீரகம் – 1 தேக்கரண்டி
- மிளகு- 1 தேக்கரண்டி
- பூண்டு – 1 கையளவு
- நல்லெண்ணெய் – 4 மேசைக்கரண்டி
- பால் பெருங்காயம் – 1 தேக்கரண்டி
- மல்லி விதை – 50 கிராம்
- புளி – எலுமிச்சையளவு
- சின்ன வெங்காயம் – 1 கையளவு
- கருவேப்பிலை – 2 கொத்து
- கல் உப்பு – தேவைக்கு
செய்முறை
முதலில் கடுகை சிவக்க வறுத்தெடுத்து பொடியாக்கிக்கொள்ளவேண்டும் .பின்பு சீரகம், மிளகு, பெருங்காயம், மல்லி விதை, வெந்தயம் இவை அனைத்தையும் தனித்தனியாக எண்ணெயில்லாமல் சிவக்க வறுத்து, சின்ன வெங்காயம், பூண்டுடன் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அரைத்த கலவையுடன் புளிக் கரைசலும் மஞ்சள் தூளும் சேர்த்து நன்கு கொதிக்க விடவேண்டும் . பின் நன்கு கொதித்து சிறிதளவு சுண்டி, பச்சை வாசனை போன நிலையில், கடுகுப் பொடியை சேர்த்துக் கலக்கவும்.
முக்கியமாக கடுகை சேர்த்த பின் கொதிக்க விடக்கூடாது. பின் சூடான எண்ணெயில் கருவேப்பிலை தாளித்து குழம்பிற்குள் ஊற்ற வேண்டும். பிரசவித்த தாய்மார்களுக்கு புழுங்கலரிசி சோற்றுடன் இக்குழம்பை கொடுக்கலாம்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1