
சமைக்க தேவையானவை
- கண்டந்திப்பிலி – ஒரு மேசைக்கரண்டி
- உப்பு – ஒன்றரை தேக்கரண்டி
- புளி தண்ணீர் – அரை கப்
- மிளகு, சீரகப் பொடி – ஒரு தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
- தக்காளி – ஒன்று
- வேக வைத்த பருப்பு – கால் கப்
- நெய் – 2 தேக்கரண்டி
- எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
செய்முறை
முதலில் தக்காளியை கழுவி விட்டு நீளவாக்கில் நான்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு கொத்தமல்லியை ஆய்ந்து கழுவி எடுத்துக் கொள்ளவேண்டும்.
பின் கண்டந்திப்பிலியை பொடி செய்து எடுத்துக் கொள்ளவேண்டும். பிறகு ஒரு எண்ணெய் சட்டியில் கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணீரை ஊற்றி, அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளித் துண்டங்களைப் போட்டு கரண்டியை வைத்து நன்கு மசித்து விடவேண்டும்.
பிறகு அதனுடன் மிளகு, சீரகத் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் ஒன்றரை தேக்கரண்டி கண்டந்திப்பிலிப் பொடி போட்டு 15 நிமிடம் நன்கு கொதிக்க விடவும்.
ரசம் ஒரு கொதி வந்ததும் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பருப்பை அதனுடன் சேர்த்து கலக்கி விட்டு 3 நிமிடம் கொதிக்க விடவும்.பின்பு பருப்பு சேர்ப்பதால் ரசம் நன்கு சுவையாக இருக்கும்.ரசம் 3 நிமிடம் நன்கு கொதித்து நுரைத்து வரும் போது மேலே கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்.
பின்னர் இரும்பு குழிக்கரண்டி அல்லது சிறிய வாணலியில் 2 தேக்கரண்டி நெய் அல்லது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடிக்க விடவேண்டும் .பின் கடுகு வெடித்ததும் மீதம் உள்ள கண்டந்திப்பிலி பொடியை போட்டு தாளித்து அதை ரசத்தில் ஊற்றி அதே கரண்டியை வைத்து ரசத்தை கலக்கி விடவேண்டும் இப்போது சுவையான கண்டந்திப்பிலி ரசம் தயார்.