காரக் குழம்புகுழம்பு

கத்தரிக்காய் மசாலா

சமைக்க தேவையானவை


  • கத்தரிக்காய் – 250 கிராம்
  • வெங்காயம் – 3
  • மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
  • புளி – சிறு எலுமிச்சை அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • தேங்காய் துருவல் – 1 கப்
  • தாளிக்க
  • கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு – தேவையான அளவு


செய்முறை


முதலில் கத்தரிக்காய்களை கழுவி காம்பு நீக்கி நான்காய் கீறிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும் புளியை தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்து, தேங்காய் துருவல், மிளகாய் தூள், அரிந்த வெங்காயம் சேர்த்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் புளிக் கலவையை கொட்டி உப்பு சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின் கலவையை எடுத்து கீறிய கத்தரிக்காய்களுக்குள் நிரப்பவும். மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு கத்தரிக்காய்களை அடுக்கி வைக்கவும்.

மீதமுள்ள மசாலா கலவையை அதன்மீது கொட்டி மூடிவைத்து மிதமான தீயில் வேகவைக்கவும். சிறிது நேரம் கழித்து கத்தரிக்காய்களை திருப்பி போடவும். எல்லாப் பக்கங்களும் வெந்தபின் எடுத்தால் கத்தரிக்காய் மசாலா ரெடி!

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button