அசைவம்கருவாடு

கத்திரிக்காய் கருவாடு பொரியல்

சமைக்க தேவையானவை


  • கத்தரிக்காய் – கால் கிலோ
  • கருவாடு – 50 கிராம்
  • வெங்காயம் – கால் கிலோ
  • தக்காளி – 2 பெரியது
  • பச்சை மிளகாய் – 4
  • பூண்டு – 4 பல் (தட்டிக்கொள்ள)
  • மிளகாய் தூள் – 1 – 2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
  • கறிவேப்பிலை , – சிறிது
  • தேங்காய் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
  • கடுகு,, உழுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்
  • உப்பு – தேவைக்கு


செய்முறை


முதலில் கத்திரிக்காய், வெங்காயம், மிளகாய், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கருவாட்டை கழுவி சிறிய துண்டாக்கி கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு வெடித்தவுடன்,

கறிவேப்பிலை, மிளகாய், தட்டிய பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்பு கத்திரிக்காய், சிறிது உப்பு சேர்க்கவும். கத்திரிக்காய், வெங்காயம் வதங்கியதும் தக்காளி, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி விடவும்.

பின்பு கருவாடு சேர்த்து சிம்மில் 10 நிமிடம் மூடி போடவும். பின்பு திறந்து மல்லி இலை தூவவும். சுவையான கமகமக்கும் கருவாடு கத்திரிக்காய் பொரியல் ரெடி.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button