
சமைக்க தேவையானவை
- பாசுமதி அரிசி – அரை கிலோ
- முழு கோழி – இரண்டு (அ) சிக்கன் லாலி பாப் 8 துண்டுகள்
- பட்டர் – ஒரு தேக்கரண்டி
- கிராம்பு – நாலு
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ½ ஸ்பூன்
- பட்டை – இரண்டு
- தக்காளி – முன்று
- ஏலம் – முன்று
- எண்ணை – 50 மில்லி
- காய்ந்த பெரிய எலுமிச்சை
- வெங்காயம் – முன்று
- உப்பு தேவைக்கு
செய்முறை
முதலில் முழு கோழியை சுத்தம் செய்யவும். அரிசியை இருபது நிமிடம் ஊறவைக்கவும். அதில் அரிசி ஒன்றுக்கு ஒன்னறை பங்கு தண்ணீர் 3 3/4 அளவு வறுகிறது நான்கு டம்ளரக எடுத்து கொண்டு சுத்தம் செய்த கோழியை அப்படியே போட்டு வேகவிடவும்.
வேக வைத்து அந்த தண்ணீரை தனியாகவும் கோழியை தனியாகவும் வைக்கவும். சட்டியை காயவைத்து அதில் எண்ணை பட்டரை ஊற்றி பட்டை, ஏலம், கிராம்பு போட்டு மனம் வந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்ச வாடை போகும் வரை வதக்கவும். தக்காளி சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைத்துள்ள கோழி வெந்த தண்ணீரை தாளித்த சட்டியில் அளந்து ஊற்றவும்.
கொதிவந்ததும் அரிசியை தட்டி உப்பும் சேர்த்து கொதிக்கவிட்டு வெந்த கோழியையும் சேர்த்து தீயை குறைத்து தம் போடவும். சுவையான அரேபிய கப்ஸா ரைஸ் தயார்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1