குழம்பு

கறிவேப்பிலை குழம்பு

Curry leaves broth

சமைக்க தேவையானவை


  • கறிவேப்பிலை – ஒரு கப்
  • மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
  • பெருங்காயம் – சிறிதளவு
  • துவரம்பருப்பு , உளுத்தம்பருப்பு
  • மிளகு – தலா 2 டீஸ்பூன்
  • இஞ்சி – ஒரு சிறிய துண்டு
  • புளி – எலுமிச்சை அளவு
  • கடுகு – அரை டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 2
  • நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு


செய்முறை


முதலில் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகு, தோல் நீக்கிய இஞ்சி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுத்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் சேர்த்து தாளித்து, அரைத்த வைத்துள்ள விழுதைப் போட்டு நன்றாக கிளறவும். பிறகு, புளிக் கரைசலை சேர்த்து உப்பு, மஞ்சள்தூள் போட்டு நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்
Source
Image

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button