
சமைக்க தேவையானவை
- மீன் – அரை கிலோ (வஞ்சிரம் (அ) ஏதேனும் முள்ளில்லாத மீன்) சின்ன வெங்காயம் –
- ஒரு கப்
- தக்காளி – இரண்டு
- புளிக் கரைசல் – ஒரு கப்
- முழுப் பூண்டு – ஒன்று உப்பு – தேவையான அளவு
- மிளகு – ஒன்றரை தேக்கரண்டி
- சீரகம் – ஒரு மேசைக்கரண்டி
- வரமிளகாய் – 5 (அ) 6
- சோம்பு – ஒரு மேசைக்கரண்டி
- பூண்டு – 4 பல்
- எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
வதக்க:
- கறிவேப்பிலை – ஒன்றரை கப்
- தேங்காய்பூ – ஒரு கப்
- எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
தாளிக்க: - நல்லெண்ணெய் – கால் கப்
- கடுகு – அரைத் தேக்கரண்டி
- சோம்பு – ஒரு தேக்கரண்டி
- சீரகம் – ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
கறிவேப்பிலை மீன் குழம்பு செய்ய முதலில் அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ளவேண்டும். பிறகு தேவையான பொருட்களை அதாவது காய்கறிகளை தண்ணீர் கொண்டு அலச வேண்டும். எண்ணெய் மற்றும் உப்பு தேவையான அளவு இருத்தால் சுவையாக இருக்கம்.
முதலில் மீனுடன் மஞ்சள் தூள் சேர்த்து சுத்தம் செய்து, சிறிது உப்பு சேர்த்து பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவேண்டும்
பிறகு வறுக்கக் கொடுத்துள்ளவற்றை சிவக்க வறுத்தெடுத்து ஆறவிடவேண்டும். பின் வதக்க வேண்டியவற்றை பச்சை வாசனை போக வதக்கியெடுத்து ஆறவைக்கவேண்டும். பின்னர் ஆறியதும் வறுத்தவற்றுடன் வதக்கியவற்றைச் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவேண்டும்.
பின்னர் கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கவும். பின்பு வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவேண்டும்.பின்பு வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
அதனுடன் அரைத்த விழுது, புளிக்கரைசல், தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும், மீனைச் சேர்த்து 5 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவேண்டும்.
பிறகு சுவையான கறிவேப்பிலை மீன் குழம்பு தயார். சூடான சாதம், இட்லி, தோசை ஆகிய அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.