
சமைக்க தேவையானவை
- கற்பூரவள்ளி இலைகள் – 10
- கடலை மாவு – 1 கப்
- அரிசி மாவு – 1/4 கப்
- பேக்கிங் சோடா – ஒரு சிட்டிகை
- மிளகாய் பொடி – 1 டீ ஸ்பூன்
- பெருங்காயப்பொடி – 1 சிட்டிகை
- உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
கற்பூரவள்ளி இலைகளை நன்கு கழுவி சுத்தம் செய்துக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, பேக்கிங் சோடா, மிளகாள் பொடி, பெருங்காயத்தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒவ்வொரு முழு இலையாக எடுத்து பஜ்ஜி மாவில் நனைத்து அப்படியே எண்ணெயில் போடவும். நன்கு பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும். அவ்வளவுதான் பஜ்ஜியை எடுத்துவிடுங்கள். இப்போது சூப்பரான கற்பூரவள்ளி பஜ்ஜி ரெடி.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1