கவுனி அரிசியில் புலாவ்

சமைக்க தேவையானவை
- கவுனி அரிசி (பிளாக் ரைஸ்) – 1 கப்
- பச்சை பட்டாணி – 14 கப்
- நறுக்கிய கேரட் – கால் கப்
- நறுக்கிய பீன்ஸ் – கால் கப்
- பெ.வெங்காயம் – 1
- சீரகம் – அரை டீஸ்பூன்
- கருஞ்சீரகம் – அரை டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
- மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- நல்லெண்ணெய் – 4 டீஸ்பூன்
செய்முறை
4 கப் தண்ணீரில் அரிசியை ஒரு இரவு முழுவதும் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சீரகம், கருஞ்சீரகம் ஆகியவற்றை கொட்டி கிளறுங்கள். பின்னர் வெங்காயம், பட்டாணி, கேரட், பீன்ஸ் ஆகியவற்றை கொட்டி வதக்கவும். அவை நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
பின்னர் அரிசியையும், அதனை ஊற வைத்த தண்ணீரையும் ஊற்றி வேக வைக்கவும். 8 விசில் வரும் வரையோ அல்லது 45 நிமிடங்களோ வேகவைத்து சாப்பிடலாம். சாதாரண அரிசியை விட இந்த கருப்பு அரிசி உடல் நலத்துக்கு மிகவும் ஏற்றது. இதில் அதிக ஆன்டி ஆக்ஸிடெண்ட், புரதசத்து உள்ளடங்கி இருக்கிறது.
இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் நெருங்காது. இதயத்திற்கும் நல்லது. கருப்பு அரிசிக்கு ஆன்டி கேன்சர் என்ற பெயரும் உண்டு. முன்பு வசதி படைத்தவர்கள் மட்டுமே இந்த உணவை சாப்பிட்டார்கள். குறிப்பாக, சீனாவில் வசதி படைத்தவர்கள் மட்டுமே இந்த உணவை உண்ண வேண்டும் என்ற சட்டமும் இருந்தது.