
சமைக்க தேவையானவை
- காடி வண்டல் – 1 கப்
- மஞ்சள் கிழங்கு – சிறு துண்டு
- சின்ன வெங்காயம் – 1 கைப்பிடி
- பூண்டு – 10 பல்
- இஞ்சி – சிறு துண்டு
- மிளகு – 1/4 தேக்கரண்டி
- சீரகம் – 1 சிட்டிகை
- உப்பு – சுவைக்கு
- நல்லெண்ணெய் – 3 மேசைக்கரண்டி
- கடுகு, கருவேப்பிலை – தாளிக்க
செய்முறை
முதலில் மஞ்சள் கிழங்கு, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, மிளகு, சீரகம், உப்பு அனைத்தையும் தண்ணீர் விட்டு கொரகொரப்பாக அரைத்தெடுக்க வேண்டும்.
பின்னர் காடி வண்டலுடன் சேர்த்து, போதுமான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவேண்டும். பின்னர் பச்சை வாசனை போன பிறகு, நல்லெண்ணெயில் கடுகு, கருவேப்பிலை தாளித்து, குழம்பில் சேர்க்கவும். சுவையான குழம்பு தயார்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1