அசைவம்காடைமுட்டை

காடை முட்டை குழம்பு

Quail egg broth

சமைக்க தேவையானவை


  • காடை முட்டை – 20
  • எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • வெங்காயம் – 1 (நறுக்கியது)
  • கறிவேப்பிலை – சிறிது
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
  • தக்காளி – 2 (அரைத்தது)
  • பச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது)
  • உப்பு – தேவையான அளவு
  • மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  • மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
  • கரம் மசாலா – 2 டீஸ்பூன்
  • தண்ணீர் – தேவையான அளவு
  • கொத்தமல்லி – சிறிது


செய்முறை


முதலில் காடை முட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 3-4 நிமிடம் வேக வைத்து இறக்கி, குளிர்ந்த நீரில் பலமுறை கழுவி, ஓட்டை உரித்துவிட்டு, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி விட்டு, பச்சை மிளகாய் மற்றும் மசாலா பொருட்களை சேர்த்து கிளறி விட வேண்டும். பின்பு தக்காளியை சேர்த்து எண்ணெய் தனியாக பிரியும் வரை வதக்கிவிட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.

குழம்பு நன்கு கொதித்ததும், அதில் வேக வைத்துள்ள காடை முட்டையை போட்டு, மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க விட்டு, கொத்தமல்லித் தூவி இறக்கினால், காடை முட்டை குழம்பு ரெடி.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button